Categories
மாநில செய்திகள்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்…. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளப் போவதில்லை என அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தேநீர் விருந்து வழங்கி இருக்கிறார். இந்த விருந்தில் சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க மனிதநேய மக்கள் கட்சியினர் கலந்துகொள்ளப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் நீட் விலக்கு மசோதா அறிக்கையை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்கிறார். இந்த சந்திப்பின் போதும் அறிக்கையை அனுப்புவது தொடர்பான எந்த ஒரு உறுதியையும் ஆளுநர் தரவில்லை. எனவே இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற இருக்கும் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் தமிழக முதல்வர் உள்பட பலர் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்தார்.

Categories

Tech |