Categories
மாநில செய்திகள்

ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன்… ஆனால் அதை மட்டும் சொல்ல முடியாது… நடிகர் ரஜினிகாந்த்….!!!!

சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்றுகாலை நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அங்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆளுநருடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்தார். அவர் கூறியிருப்பதாவது இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதாவது ஆளுநருடன் அரசியல் தொடர்பாக பேசினேன். எனினும் அதை பற்றி தற்போது சொல்ல முடியாது. அப்போது மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா..? என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ரஜினி பதிலளித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய ரஜினி, காஷ்மீரில் பிறந்து அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ரவி. இப்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. தமிழர்களின் கடினஉழைப்பு, நேர்மை ஆகியவை மிகவும் பிடித்து இருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தின் நன்மைக்காக, நலனுக்காகதான் என்ன செய்யவும் தயார் என்று அவர் என்னிடம் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து சொல்ல முடியாது என ரஜினி பதிலளித்தார். ஜெயிலர் படப்பிடிப்பு வரும் 15 (அல்லது) 25ம் தேதி தொடங்கும் என ரஜினி கூறினார்.

Categories

Tech |