சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக டெல்லிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஆளுநருடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம்’ என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்த நிலையில், அதன் பிறகு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் தேர்தலில் இருந்து பின் வாங்கினார். தற்போது வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் அதில் ரஜினி போட்டியிட உள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் சில கருத்துக்களை கூறி வருகின்றனர்.