Categories
மாநில செய்திகள்

ஆளுநருடன் திடீர் சந்திப்பு…… மீண்டும் அரசியலில் ரஜினிகாந்த்?…. அவரே சொன்ன தகவல்…..!!!!

கடந்தசில நாட்களுக்கு முன்பு புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் அதன் பிறகு தனது கருத்தில் இருந்து பின் வாங்கினார்.இந்நிலையில் ரஜினிகாந்த் என்று ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்தது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆளுநருடனான இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது . ஆளுநருக்கு தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது.

தமிழகத்தின் நலனுக்காக எவ்வளவு உழைப்பதற்கும் தயாராக இருக்கிறார் என்று ரஜினி தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பில் அரசியல் குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அரசியல் பேசினோம். ஆனால் அது பற்றி இப்போது உங்களிடம் பேச முடியாது”என்று ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.

Categories

Tech |