பாஜகவை எப்படியாவது வலுவாக காலூன்ற செய்ய வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை பொறுப்பில் அமர்த்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக நான்கு இடங்களை தமிழகத்தில் கைப்பற்றிய நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகத்தை மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் செல்வாக்கை பயன்படுத்தி திமுக எம்பிக்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று யூகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடலூர் எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு, நெல்லை எம்பியான திரவியம் பாஜக பிரமுகரை தாக்கிய வழக்கு உள்ளிட்ட விஷயங்களை கொண்டு தமிழகத்தில் அதிரடி அரசியலை அரங்கேற்ற பாஜக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான வேல்முருகன் இன்று ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். இதற்கான பின்னணியில் நிச்சயம் அரசியல் காரணங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.