முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விரோதி போல பார்க்கிறார் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தீர்மானத்தை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநருக்கு அவசியமில்லை. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக தமிழக அரசு நினைத்தால் நீதித் துறை வாயிலாக கேள்வி கேட்கலாம்.
அப்படியில்லாமல் தெருவில் இறங்கிப் போராடி ஆளுநரை அசிங்கப்படுத்துவது தமிழக பாஜக ஒருபோதும் ஏற்காது. தமிழகத்தில் மோடியை யார் ஆதரித்தாலும் உன்னே பயந்து ஆதரிக்கிறார்கள். பதவிக்காக ஆதரிக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பிரதமர் மோடியை தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் தமிழகத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். அப்படி என்றால் மோடியை எதிர்ப்போர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ..? பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதலால் மோடிக்கு எதிராக பேசுகிறார்களா..? என கேள்வி எழுப்பினார்.