இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு பிறந்தநாள். இதன் காரணமாக புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அம்பேத்கர் உடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் மகாத்மா காந்தி அவர்களுக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தார்.
இவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். அதன் பிறகு நாம் அனைவரும் முடிந்த வரை தமிழில் கையெழுத்து போட பழகிக் கொள்ள வேண்டும் என்றார். இதனையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்ததைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிதம்பரர் நடராஜருக்கும் எனக்கும் இடையில் நாரதர் தேவை இல்லை. என்னிடம் அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்பதற்காக கீழே அமருமாறு கூறினார்கள்.
ஆனால் ஒருவர் என்னை எழுந்து செல்லுமாறு கூறியதால், நான் உரிமையோடு இங்கே அமர்வேன் என்றேன். நான் அவர் கூறியதை ஏற்கவில்லை. மற்றபடி எனக்கு எந்த ஒரு அவமானமும் நடைபெறவில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள். அதே போன்று நானும் அவர்களுக்கு மரியாதை கொடுத்தேன். ஆனால் எதற்காக அவர்கள் என்னிடம் அப்படி நடந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை என்றார். மேலும் ஆளுநர்கள் யாரும் அரசியல் செய்வதில்லை என்றும் ஆளுநர்களின் நடவடிக்கைகளை வைத்து அரசியல் செய்கின்றனர் என்றும் கூறினார்.