தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று சென்றிருந்தார். அப்போது அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களில் ஒருசிலர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories