அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்பிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சட்ட மசோதா மீது கவர்னர் எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. இதுகுறித்து கவர்னர் விளக்கம் கேட்டால் அவருக்கு பதில் அளிக்கப்படும். மேலும் கவர்னர் மாளிகையில் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.
அதில் சில மசோதாவுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இதனையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்பது குறித்து நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசப்படும். ஆனால் தி.மு.க. 10 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்ற மக்கள் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.