இன்று ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்றிருந்தார். அப்போது ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விசிக, திமுக உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீது கல், கையில் இருந்த கறுப்புக் கொடி முதலியவை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளதாவது, தமிழக ஆளுநர் சென்ற கார் மீது மயிலாடுதுறையில் கல்வீசித் தாக்கி உள்ளது, மாநிலத்தின் ஆளுநருக்கே பாதுகாப்பில்லை என்ற நிலையில், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநரின் வாகனம் மீது கருப்புக்கொடி வீசப்படவில்லை என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதையடுத்து ஆளுநரின் வாகனம் சென்ற பிறகுதான், காவல்துறை வாகனங்கள் மீது கருப்புக்கொடி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.