Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநர் விருந்து புறக்கணிப்பு…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி…!!!!1

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களின் நிலை குறித்துப் பேசுவார்கள் என்று கூறப்பட்டது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,  முதல்வரிடம் உறுதி அளித்த பிறகும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. மேலும் பாரதியார் சிலை திறப்பு விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவித்துள்ளார். பேரவை மக்களின் மாண்பை ஆளுனர் குலைப்பதால் இந்த முடிவு எனவும் விளக்கினார்.

Categories

Tech |