தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமை இல்லை என செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்ரமணியன் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்திற்கு அவரது குடும்பத்தினர் அவர்களை சந்திப்பதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்த அவர் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, வெடிகுண்டு வீச்சில் மரணம் அடைந்த தமிழக காவலர் சுப்பிரமணியன் நாட்டிற்காக தனது இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளார். சுப்பிரமணியனின் இறப்பு அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட இழப்பு மட்டுமல்ல அது காவல்துறைக்கே ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என்றும் கூறியுள்ளார்.விரைவில் தமிழக அரசு அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊரடங்கு முறை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் ஆளுமைமிக்க தலைவர் இல்லை என்பதை, மாநிலத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.