திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு நாட்களில் ஒரு அமைச்சர், இரண்டு எம்எல்ஏக்கள் விலகி இருப்பது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
மம்தா அரசியல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்திவாதி கடந்த மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய அவரை, சமாதானம் செய்ய மூத்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. கடந்த புதன்கிழமை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்திவாதி நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார்.
நேற்று முன்தினம் மாலையே மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுஜேந்திர திவாரியும் கட்சியிலிருந்து விலகி விட்டார். ஒரே நாளில் இரண்டு எம்எல்ஏக்கள் விலகிய அதிர்ச்சியிலிருந்து மம்தா பானர்ஜி மீட்பதற்கு நேற்று காலை சில்வத்ரா தத்தா என்ற மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மூன்று பேரும் விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மேலும் எம்எல்ஏக்கள் அணி மாறுவதை தடுக்கும் விதமாக திரிணாமுல் சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் மம்தா சந்தித்து பேசி வருகிறார்.