பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகை ஆர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஆர்த்தி 1987 ஆம் ஆண்டு வெளியான ‘வண்ணக்கனவுகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . இதன்பின் ‘அருள்’ படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு தோழியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மேலும் இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு ஜூலியுடன் பல ரகளைகள் செய்து பிரபலமடைந்தார் . இந்நிலையில் நடிகை ஆர்த்தி கண்ணாடியின் முன் நின்று செல்பி எடுத்துள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மிக குண்டாக மாறியுள்ள ஆர்த்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர் .