Categories
சினிமா தமிழ் சினிமா

ஆளே மாறிவிட்டாரே… தாடி பாலாஜியின் மனைவியா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பணிபுரிந்தவர் தாடி பாலாஜி. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது தாடி பாலாஜி-நித்யா இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களை சேர்த்து வைக்க போட்டியாளர்கள் தீவிர முயற்சி செய்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாளில் தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவரும் இணைந்துவிட்டதாக அறிவித்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் தாடி பாலாஜி -நித்யா தம்பதிக்கு  போஷிகா என்ற ஒரு மகள் உள்ளார் ‌. நித்யா அவ்வப்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நித்யா மாடர்ன் உடையில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாடி பாலாஜியின் மனைவியா இவர்? என ஆச்சரியமடைந்துள்ளனர்.

Categories

Tech |