Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆள் உயர்த்தில் கிஃப்ட் கொடுத்துவிட்டு”…. சீரியலில் இருந்து விலகிய நடிகர்…. ட்விட்டரில் உருக்கம்….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “காற்றுக்கென்ன வேலி” தொடரில் இருந்து விலகும் ராகவேந்திரன்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியில் தொடங்கி  15 வருடங்களாக சீரியலில் நடித்து வருகிறார் ராகவேந்திரன். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்தார். தற்போது இவர் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாக செய்தி வெளியிட்டிருக்கிறார். அண்மையில் நடந்த செய்தியாளர்களின் பேட்டியின் போது கடந்த 15 ஆண்டுகளாக துணை நடிகராகவே நடித்து வருகிறேன். மாதம் 6500 ரூபாய் சம்பளம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. பிச்சைக்காரன் கூட இதை விட அதிக ஊதியம் பெறுகிறான் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தன்னுடன் காற்றுகேன்ன வேலியில் இணைந்து நடிக்கும் பிரியங்காவுக்கு ஆள் உயரம் உள்ள ஒரு டெடிபியர் பொம்மை பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிஸ் யூ பிரியங்கா என்றும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்களின் போட்டோக்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |