Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆள் நடமாட்டமே இல்ல… காணும் பொங்கலுக்கு யாரையும் காணோம்… வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள்…!!

கொரானா பரவல் தடை எதிரொலியால் விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கல் தினமான இன்று சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக காணும் பொங்கல் தினமான இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களாக இருந்து வரும் செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்க்  கோட்டை, வீடூர் அணை, மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Categories

Tech |