விமானத்தையே தங்கும் விடுதியாக Airbnb நிறுவனம் மாற்றி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதேச்சையாக இணையத்தில் ஹோட்டல்களை தேடிய ஒரு பெண் இந்த இடத்தை கண்டதும் திகைத்துப் போயிருக்கிறார். இந்நிலையில் இந்த விமான விடுதியில் தங்கியிருக்கும் அப்பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விடுதிகளை வாடகைக்கு அளிக்கும் சேவையை வழங்கி வரும் Airbnb நிறுவனத்தின் வாயிலாக Abbi எனும் பெண் இந்த விமான விடுதியை கண்டுபிடித்திருக்கிறார்.
மத்திய அமெரிக்காவில் கோஸ்டாரிக்கா நாடு இருக்கிறது. கடல்கள், மழைக்காடுகள் என சுற்றுலா வாசிகளின் சொர்க்க புரியாக திகழும் இந்த நாட்டுக்கு சுற்றுலாவுக்காக புறப்பட்ட Abbi, தங்குவதற்கு இடத்தை தேடி இருக்கிறார். அப்போது தான் இந்த விமானவிடுதி பற்றி அவருக்கு தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போன அவர் உடனே இந்த விடுதியை புக் செய்திருக்கிறார். கோஸ்டாரிக்காவின் மானுவல் அன்டோனியோ தேசியபூங்கா பகுதி அடர்ந்த மழைக்காடுகளை கொண்டது. இதன் நடுவே அவர் போயிங் 727 விமானத்தை விடுதியாக மாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர் தனது டிக்டாக் பக்கத்தில் “முழு உலகிலும் சிறந்த Airbnb விடுதி இது தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.