Categories
மாநில செய்திகள்

ஆழித் தேரோட்டம்… 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு !!!

திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 15ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பிரம்மாண்ட ஆழித்தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சைவ சமய மரபில் பெரிய கோவில் என அழைக்கப்படுவது  திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆழித்தேர் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இது விளங்குகிறது. மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால்இதனை  ஆழித்தேர்  என அழைக்கின்றனர். இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |