Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகள்…. எச்சரிக்கை விடுத்து அனுப்பிய காவல்துறையினர்… அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை…!!!!

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை ரோந்து வந்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் அணையில் ஆழம் தெரியாமல் இறங்கி குளிப்பதும், செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற சென்ற கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் படகு இல்லம் கட்டப்பட்டு உள்ள பகுதி வழியாக அணைக்கும் செல்கிறார்கள்.

இந்நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த ஆழியாறு காவல்துறையினர் அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அணையில் குளிப்பதால் ஏற்படுகின்ற ஆபத்துக்கள், இறப்புகள் குறித்தும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பேசியதாவது, ஆழியாறு அணை ஆழமானது மட்டுமல்லாது ஆபத்தானதும். அணையில் பாறைகள் சூழல் இருப்பதால் நீச்சல் தெரிந்தவர்கள் குளித்தாலும் சூழலில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

இதை பொதுப்பணித் துறையினரும் கண்டுகொள்வதில்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேர் உயிரழந்தார்கள். எனவே வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அணையில் உள்ள ஆபத்து தெரியாது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு பலகை அங்காங்கே வைக்க வேண்டும். மேலும் விடுமுறை தினங்களில் காவல்துறையினரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சேர்ந்து அணை தடுப்பு பகுதியில் ரோந்து செல்ல வேண்டும். படகு இல்லம் வழியாக அணைக்குள் செல்வதை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |