Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது… திடீரென வீசிய சூறைக்காற்று… தவறி விழுந்து மீனவர் பலியான சோகம்..!!

நாகை மாவட்டத்தில் ஆல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தில் திருவளர்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் வீரக்குமார், சுபாஷ், ஜெயபால், பாஸ்கர் உள்ளிட்ட 9 மீனவர்களுடன் சென்ற 27-ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு நாகைக்கு நேர் கிழக்கே 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.அச்சமயத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றால் கீச்சாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் அனைவரும் ஆழ் கடலில் விழுந்த பாஸ்கரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் பாஸ்கரின் காலில் வலை இறுக்கமாக சிக்கிக்கொண்டதால் சக மீனவர்கள் அனைவரின் கண்முன்னே பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.அதன் பின்னர் அவரின் உடலை மீட்டு மீனவர்கள் இன்று காலை துறைமுகத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் பற்றி கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |