சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த தன் தங்கையை புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. அந்தக் கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். அதனைக் கண்ட சிறுமியின் சகோதரி ஸ்ரீதேவி (14) உடனடியாக ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையின் தலைமுடியை பிடித்து இழுத்துள்ளார்.
அதன் பிறகு அருகில் இருந்தவர்களை சத்தமிட்டு அழைத்துள்ளார். உடனடியாக அப்பகுதிக்கு வந்தவர்கள் சிறுமியை இழுத்து காப்பாற்றினர். அதன்பிறகு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து ஆழ்துளை கிணறு உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தனது தங்கை விழுந்ததும் புத்திசாலித்தனமாக யோசித்து தங்கையின் உயிரை காப்பாற்றிய 14 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.