முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டார். அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறி வந்த மருத்துவமனை நிர்வாகம், சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடலில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியது.
இந்த நிலையில் இன்று டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலையை நோக்கி சென்று விட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளது.