Categories
சென்னை மாநில செய்திகள்

ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்… பரபரப்பு….!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரயில் சென்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனிடையே அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர் புத்தகப் பையில் ஜல்லிக் கற்களை வைத்து இருப்பதை பார்த்த  ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சக மாணவர்கள் நவீனை விடுவிக்க வேண்டும் என்று ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதன்பிறகு தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது நவீனை  விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து நவீனை  விடுவித்த நிலையில் மாணவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |