உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 79 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரி சிவ அருணாச்சலத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கணவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேலு என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.