சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கு வரும் ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்கள் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி பதிவு செய்யப்படும் ஆவணங்களை திருப்பி தராமல் சார்பதிவாளர்கள் சிலர் நிலுவையில் வைத்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
Categories