உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 95 ஆயிரத்து 50 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜேஷ் என்பவர் கேரளாவில் இருந்து உரிய ஆவணம் இன்றி 95 ஆயிரத்து 50 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணத்தை பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் அதிகாரியான கமிஷனர் சையது முத்தபாவிடம் ஒப்படைத்துவிட்டனர்.