Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 63 ஆயிரத்து 720 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- மம்சாபுரம் சாலையில் தாசில்தார் ரெங்கசாமி தலமையிலான  காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 63 ஆயிரத்து  720 ரூபாயை  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மம்சாபுரம் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டனர்.

Categories

Tech |