உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 66 ஆயிரத்து 720 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி 61 ஆயிரத்து 720 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர் சிவ அருணாச்சலத்திடம் ஒப்படைத்துள்ளனர்