Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் மின்றி கொண்டு வந்த பணம் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி  கொண்டுவரப்பட்ட1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாயை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ரோட்டில் வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மர வியாபாரியான கணேசன் உரிய ஆவணம் மின்றி 1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர்  பணத்தை பறிமுதல் செய்து  நகராட்சி தேர்தல் அதிகாரி முஸ்தபா கமாலிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |