தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பண்டிகைகள் நெருங்கி வருவதால் கேக் வகைகளை தயாரித்து விற்பனை செய்வது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது . குறிப்பாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்பு இனிப்பு வகைகளை, மிக்சர், பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. அதன் மூலமாக 116 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குள் 100 கோடி வருவாய் ஈட்டுவதற்கு ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ், 2023 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் வகைகளை தயாரித்து விற்பது குறித்து ஆவின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. கப் கேக் மட்டுமல்லாமல் அரை கிலோ மட்டும் ஒரு கிலோ அளவில் கேக் தயாரிப்பது மற்றும் பல்வேறு சுவைகளில் கேக் தயாரிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.