கர்ப்பணிபெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொருட்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,மேலும் இதன் மூலம் அரசுக்கு ரூ.77 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்சாட்டை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில், ஏற்கெனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளதாவது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகமானது, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் திட்டத்தை, கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேலும் இதில் அவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் தரப்படும் எனவும் ஆனால் அந்த நிதி முழுமையாக அவர்களின் உடல் நலம் சார்ந்து பயன்படுவதில்லை என்பதால், அரசே 10% தொகைக்கு தேவையான பொருட்களை, அவர்களுக்கு வாங்கி தருகிறது. இதையடுத்து ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை படி, கர்ப்பிணிகளுக்கு பேறு காலத்தில் என்ன ஊட்டச்சத்து வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும் இதன் அடிப்படையில் PRO PL என்ற health mix டெண்டர் விடப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதன் சந்தை விலை ரூ.588 எனவும் , ஆனால் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகமானது, அதை ரூ.460.50-க்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் 127.50 ரூபாய் சந்தை விலையிலிருந்து குறைவாக வாங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2019-முதல் PROPL வாங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 கிராம் எடை கொண்ட 17,65,560 பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளன. டெண்டர் முடிந்ததன் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10- ஆம் தேதி மீண்டும் டெண்டர் திறக்கப்பட்டது. மேலும் இதற்கான நிபந்தனைகள் எதுவும் மாற்றப்படவில்லை என்பதால், டெண்டர் திறக்கப்பட்ட பின், மாநில திட்ட ஆணையம், இந்த சத்துமாவை ஆவினிடமிருந்து பெறலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த கருத்து குறித்து விவாதித்து முடிவு செய்ய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆவின் நிர்வாக இயக்குநர் அந்த குழுவில் இருந்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 32 சத்துகள் கொண்ட மாவு தேவை என ஆவினிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டெண்டர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால், யாரிடமிருந்து என்ன விலையில் வாங்க போகிறோம் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் தொழில்நுட்ப குழு முடிவு செய்யவில்லை. ஆகவே அதற்குள்ளாக அண்ணாமலை இக்குற்றச்சாட்டை முன் வைப்பது சரியல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.