தமிழகத்தில் ஆவின் வரலாற்றிலேயே முதன் முறை ஒரே நாளில் அதிகபட்சமான விற்பனை பதிவு செய்யப்பட்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் நாள்தோறும் நாற்பத்தி ஒரு ஆயிரம் லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து உள்ளூர் விற்பனை போக இருபத்தி ஒரு லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாக விநியோகம் செய்து வருகிறது. மீதமுள்ளவை தயிர், நெய், வெண்ணை, லஸ்ஸி, பால் பவுடர், பால்கோவா, குலாப் ஜாமுன்,ரசகுல்லா மற்றும் மைசூர் பாக்கு உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு காஜி கத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜி பிஸ்தா ரோல், காபி ஃப்ளேவர் மில்க் பருப்பி ஆகிய இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இணைப்புகள் வழங்க சமீபத்தில் டெண்டர் விடப்பட்டு இருந்தது. மேலும் ஆவின் நிறுவனம் தயாரிக்கும் இனிப்புகளை வாங்க வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக ஆவின் இனிப்புகளை வாங்குவதற்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி, மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், தலைமைச் செயலக அலுவலக பணியாளர் சங்கம், மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, உணவு பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உமாவின் இனிப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், மிகவும் தூய்மையான பாடில் இனிப்பு வகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். வரக்கூடிய நாட்களில் 1500 டன் இனிப்புகளை விற்பனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த துறையை மீட்டெடுத்து வெளிநாடுகளில் மீண்டும் விற்பனையை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.