Categories
மாநில செய்திகள்

ஆவின் ஊழியர்களே!!…. அரசு அறிவித்த தீபாவளி போனஸ்…. எவ்வளவு தெரியுமா?…!!!!!

ஆவின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மார்க், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற  24- ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவித்துள்ளது.

அதில் இந்த ஆண்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை மூலம் ஆவின் நிறுவனத்திற்கு 13.71 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதனால் அந்த லாபத்தில் இருந்து 18,500 பால் உற்பத்தியாளர்களுக்கு 3.75 கோடி செலவில் தீபாவளி கொண்டாடுவதற்காக போனஸ் வழங்கப்படுகிறது. இதனால் ஆவின் நிறுவன ஊழியர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது.

Categories

Tech |