மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது. அப்படி கிடைக்காதவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் ஆவின் பாலில் புழு இருந்ததாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக தகவல் வெளியான நிலையி ஆவின் பொருட்களின் தரம் குறித்து அவதூறு பரப்பும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார். ஆவின் பொருட்கள் பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பிறகே மக்களை சென்றடைகிறது. அவற்றில் புழு. பூச்சிகள் இருப்பதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைக்கும் தனியார் போட்டி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.