நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பால்வளத் துறை அமைச்சர் சா. மு நாசர், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் விரைவில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் ஆயிரம் பணியிடங்கள் ஆவின் நிறுவனத்தில் விரைவில் நிரப்பப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 354 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் 20 லட்சம் விவசாயிகள் அங்கத்தினராக இருக்கிறார்கள். நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.