Categories
மாநில செய்திகள்

“ஆவின் நிறுவனம்” ரிலையன்ஸ் வசம் போகிறதா….? நெருப்பில்லாமல் எப்படி புகையும்…. பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பு…..!!!!

ஆவின் நிறுவனத்தை தனியாரிடம் விற்பனை செய்யப் போவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கோயம்புத்தூரில் அதிக விலைக்கு பால் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்ததால்  100-க்கும் மேற்பட்ட  முகவர்களின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மளிகை கடைகளுக்கு நேரடியாக பால் வினியோகம் செய்யும் உரிமையை கொடுக்கப் போவதாகவும் அதில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மாற்ற போவதாகவும் ஆவின் பால் பொது மேலாளர் ராமநாதன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விநியோகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சேரி பால்பண்ணையில் எழுந்த பிரச்சனை காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு, விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆற்காடு, ஆம்பூர், வாலாஜா, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளிலும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகள் தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அமைச்சரோ, ஆவின் நிர்வாகமோ முன்வரவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது தமிழக அரசு மொத்தமாக ஆவின் நிறுவனத்தை தனியாருக்கு சத்தம் இல்லாமல் விற்று விடப்போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்ந்தால் கண்டிப்பாக தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் சங்கம் சார்பில் கடுமையான போராட்டம் தொடரும். ஒரு லிட்டர் பாலை விற்பனை செய்யும் போது முகவர்களுக்கு ஒரு ரூபாய் தான் லாபம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு முகவர்களுக்கு உரிய முறையில் லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்கப் போவதாக பொது மேலாளர் கூறியது நெருப்பில்லாமல் கண்டிப்பாக புகையாது. எனவே தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |