Categories
தேசிய செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ… பெரும் அதிர்ச்சி சம்பவம்… எச்சரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்….!!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பால் வாங்கி சென்றிருக்கின்றார். வீட்டிற்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் பால் பாக்கெட் ஒன்று செத்து மிதப்பது தெரியவந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது நடந்த தவறால் ஈ உள்ளே சென்றிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அந்த பால் பாக்கெட் நேற்றைய தேதி (20.9.2022) அச்சிடப்பட்டிருக்கிறது. அதன்படி நேற்று அதிகாலை தான் பேக்கிங் செய்திருக்க வேண்டும். இது பச்சை நிற பாக்கெட்டில் விற்பனைக்கு வந்த பால் என்பது குறிப்பிடத்தக்கதாககும். அதன்படி நிலைப்படுத்திய பால் வகையைச் சேர்ந்தது.

மேலும் இதில் கொழுப்பு சத்து 4.5 சதவீதம் இருக்கும் இந்த நிலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த பால் பாக்கெட்டை திரும்ப பெற்றுக் கொண்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. தமிழகத்தில் தனியார் பாலின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பலரும் ஆவின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆவின் பாலை அருந்துகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஆவினில் புதிது புதிதாக இனிப்பு வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக ஆவினுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த சூழலில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ விழுந்து சர்ச்சைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகிறது. மேலும் சிறு தவறை கூட ஒட்டுமொத்த ஆவின் மீதும் தமிழக அரசு மீதும் அவப்பெயர் ஏற்படுத்தி பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |