தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் விலை குறைப்பு. தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு அரசாணையில் கையெழுத்திட்டார்.
இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சமன்படுத்தப்பட்ட பால் ஒரு லிட்டர் ரூ.43 க்கு பதில்ரூ.40, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் ரூ.20 க்கு பதில்ரூ.18.50, நிலைப்படுத்தப்பட்ட பால்ரூ. 23.50 க்கு பதில் ரூ.22 , நிறை கொழுப்பு பால் ரூ.25.50 க்கு பதில் ரூ.24 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் முதல்வரின் இந்த நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.