பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோவில் அனிதா – ரியோ இடையே மோதல் ஏற்படுகிறது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக செயல்பட்ட போட்டியாளராக அனிதா தேர்வு செய்யப்பட்டு ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் அனிதாவுக்கும் ரியோ வுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. இதில் அனிதா ‘நிஷாவும் அர்ச்சனாவும் கேம் விளையாடும் போது அர்ச்சனா அழுததால் கேமே ஒரு லெவலில் டவுன் ஆகி விட்டது அப்போது உங்களுக்கு அது போரிங்ன்னு தெரியவில்லையா? என ரியோவிடம் கூறினார் . இதற்கு பதிலளித்த ரியோ அந்த ‘ஐடியாவை கொடுத்ததே நீதான்’ என்கிறார். இதையடுத்து ‘நிஷா ஒரு விஷயம் செய்தால் உங்களுக்கு பிடிக்கல, நான் அதே விசயத்த செய்தால் சுவாரஸ்யம் இல்லையா ? என கேள்வி எழுப்புகிறார் அனிதா .
#Day68 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/bR48SY0xVm
— Vijay Television (@vijaytelevision) December 11, 2020
இதற்கு ‘பிடிக்கல என்பதற்கும் சுவாரசியம் இல்லை என்பதற்கும் வித்தியாசம் உண்டு’ என வழக்கம்போல் தனது கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார் ரியோ. அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய அனிதா ‘நீங்க தப்பா சொல்லி இருக்கீங்க’ என ஆவேசமாக ரியோ விடம் கூற , பதில் சொல்லத் திணறிய ரியோ ‘தேங்க்யூ’ எனக்கூறி விலக முயன்றார். ஆனால் விடாமல் பேசிய அனிதா ‘கரெக்ட் பாயின்ட் பேசும்போது போயிடுவார் இது தான் ரியோ ‘ என்கிறார். இதனால் கடும் கோபத்துக்கு ஆளான ரியோ “ஐ அம் நாட்” என அழுத்தமாகக் கூறுகிறார். இதனால் இன்றைய எபிசோடில் ரியோவுக்கும் அனிதாவுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.