ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய அனைத்து பிங்க் பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் முதல் போட்டி விருவிருப்பான போட்டியாக இருக்கும். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பல வருடங்களுக்குப் பிறகு மோதுகிறது. இந்தப் போட்டி மிகவும் சிறப்பாக இருக்கும். இரவு – பகல் போட்டி என்பதால் பகல் 9.30 மணியிலிருந்து நாம் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு. கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இந்த போட்டி அமையும் என அவர் தெரிவித்தார்.