சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படம் உலகின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றான ‘ஆஸ்கர் விருது’ பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்துக்கு அண்மையில் ஆஸ்கர் அமைப்பு சிறந்த கௌரவத்தை வழங்கியது. மேலும் தன்னுடைய யூடியூப் சேனலில் ஆஸ்கர் அமைப்பு ‘ஜெய்பீம்’ படத்தின் காட்சிகளை பகிர்ந்துள்ளது. இதனை திரையுலக பிரபலங்கள் இந்திய சினிமாவிற்கு கிடைத்த கவுரவமாக கருதி வருகின்றனர்.
இந்நிலையில் 94-வது ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ள தகுதி பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வாகியுள்ளது. இதற்கு முன்பு “சூரரை போற்று” திரைப்படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்தது. அதனை தொடர்ந்து தற்போது ‘ஜெய் பீம்’ திரைப்படம் தேர்வாகி இருப்பதால் சூர்யா ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.