Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆஸ்கர் விருது” இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட படம் எது தெரியுமா‌….? வெளியான அறிவிப்பு….!!!!

சினிமா துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான விருதும் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தியா சார்பில் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு செல்லோ சோ திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு குஜராத்தி படமாகும்.

இந்த படத்தை பேன் நளின் இயக்க, பரேஷ் மேத்தா, திபென் ராவல், ரிச்சா மீனா, பவேஷ் ஸ்ரீமாலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்தியாவில் வசிக்கும் ஒரு 9 வயது சிறுவன் சினிமா மீது கொண்டிருக்கும் ஆசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |