ஆஸ்கர் விருது இறுதிசுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் அசல் பாடல் பிரிவில் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடலும், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் குஜராத்தி மொழியில் வெளியாகிய “செல்லோ ஷோ” படமும் தேர்வாகி உள்ளது. இது தவிர்த்து “ஆல் தட் ப்ரீத்ஸ்” ஆவணப்பட பிரிவிலும், “தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்” ஆவண குறும்பட பிரிவிலும் தேர்வாகி இருப்பதாக ஆஸ்கர் கமிட்டி அறிவித்து உள்ளது.
இவற்றில் தி எலிபெண்ட் விஸ்பரஸ் குறும்படத்தை கார்த்திசி கோன்சலஸ் இயக்கியுள்ளார். 95-வது ஆஸ்கர் விருது வழங்கக்கூடிய விழா அடுத்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இறுதிப் பரிந்துரைகள் வருகிற ஜனவரி 24ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.