ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான 91 வயதான பானு அதய்யா மும்பையில் காலமானார்.
கடந்த 1950-களில் இந்தி திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையை பயணிக்க தொடங்கிய பானு அதய்யா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1983-ம் ஆண்டில் பிரிட்சர்டு ஹண்ட்ரோ இயக்கிய காந்தி சுயசரிதை இத்திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை பெற்ற பானு அதய்யா அந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியரும் பிரபல திரைப்பட ஆடை வடிவமைப்பாளருமான 91 வயதான பானு அதய்யா மூன்று ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்டதால் படுகையில் அவர் காலத்தை கழித்து வந்தார். நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது மகள் ராதிகா குப்தா தெரிவித்துள்ளார். அதோடு அவரது இறுதி சடங்கு தெற்கு மும்பையில் உள்ள சத்னாபதி மைதானத்தில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.