ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட மலையாளத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக ஆஸ்கர் திரைப்பட விருது விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படங்கள் சார்பில் போட்டியிட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் வெளியான ‘ஜல்லிக்கட்டு’ என்ற மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘மிருகங்களை விட மனிதர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துரைக்கிறது’ என இந்த திரைப்படத்தை இந்தியா சார்பாக தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் ராகுல் ராவைல் கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்படம் ஒன்று இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டிருப்பதை தென்னிந்திய சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.