Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் ஹாலிவுட் சினிமா

ஆஸ்கார் விருதுகளின் பட்டியல்… “ஆறு விருதுகளை தட்டிச் சென்ற “டியூன்” திரைப்படம்”…!!!

94-வது ஆஸ்கர் விருது விழாவில் ஆறு விருதுகளை டியூன் திரைப்படம் வென்றுள்ளது.

ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று. இந்நிலையில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆஸ்கர் முழு விருதுப்பட்டியல் :   சிறந்த படம்- கோடா, சிறந்த நடிகை- ஜெசிகா சாஸ்டெய்ன்(The Eyes of Tammy Faye), சிறந்த நடிகர்- வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்), சிறந்த இயக்குநர்- ஜேன் காம்பியன்( தி பவர் ஆஃப் தி டாக் ),  சிறந்த ஒரிஜினல் பாடல்- நோ டைம் டூ டை( நோ டைம் டூ டை) இசை- பில்லி எல்லிஷ், ஃபின்னியஸ் ஓ கானல், சிறந்த ஆவண படம்- சம்மர் ஆஃப் சோல், சிறந்த தழுவல் திரைக்கதை- கோடா, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- பெல்ஃபாஸ்ட், சிறந்த ஆடை வடிவமைப்பு- ஜென்னி பீவன் ( க்ரூயல்லா ), சிறந்த சர்வதேச திரைப்படம்- டிரைவ் மை கார்(ஜப்பான்), சிறந்த துணை நடிகை- அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி), சிறந்த துணை நடிகர்- ட்ராய் கோட்சுர் (கோடா), சிறந்த அனிமேஷன் படம்- என்கான்டோ, சிறந்த ஒரிஜினல் இசை- ஹான்ஸ் ஜிம்மர் (டியூன்), சிறந்த ஒளிப்பதிவு- க்ரெய்க் ஃப்ரேசர் (டியூன்), சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- டியூன், பால் லாம்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரையன் கானர், ஜெர்ட் நெஃப்சர், சிறந்த எடிட்டிங்- ஜோ வாக்கர் (டியூன்), சிறந்த சவுண்ட்- டியூன், மேக் ரூத், மார்க் மான்கினி, தியோ கிரீன், டக் ஹெம்ஃபில், ரான் பார்லட், சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்- டியூன்.

இந்த விருது விழாவில் அதிகபட்சமாக “டியூன்” திரைப்படம் ஆறு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |