Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது விழா… “விருதை தட்டிச்சென்ற ஜேம்ஸ்பாண்ட் பாடல்”…!!!

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை ஜேம்ஸ்பாண்ட் பாடல் வென்றுள்ளது.

ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று.

இந்நிலையில் தற்போது தொடங்கியுள்ள 94-வது ஆஸ்கார் விருதில் ஜேம்ஸ் பாண்ட் “நோ டைம் டு டை” திரைப்படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பாடகி பில்லி எலீஷ், பாடலாசிரியர் ஃபினிஸ் ஓ கானெல் இருவரும் பெற்றுக்கொண்டனர். பொதுவாக ஜேம்ஸ் பாண்ட் படங்களின் டைட்டில் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெறுவது வழக்கம். நோ டைம் டு டை” பாடல் இதுவரை 6 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |