வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.. இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது.
இந்த ஆஸ்கர் விருது விழா கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் யாரும் இல்லாமல் தான் நடத்தப்பட்டு வந்தது.. ஆனால் இந்த முறை வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் மற்றும் ரெஜினா ஹால் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றனர். இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை , சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்று கொள்வதற்காக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்நிகழ்ச்சியின் போது நடிகர் கிறிஸ் ராக் கலகலப்பாக நகைச்சுவையுடன் பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்து பேசினார்.. இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டுத் திரும்பினார்.
இதனால் அங்கிருந்த நடிகர்கள், நடிகைகள் என பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.. இதையடுத்து ஸ்மித் தனது இருக்கைக்கு சென்றார்.. பின் எனது மனைவியின் பெயரை உன் வாயிலிருந்து நீக்கிவிடு என்று சத்தமிட்டார். அலோபீசியா என்னும் நோயினால் முடியை இழந்து வருகிறார் ஜடா ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை… ஆஸ்கர் விழா மேடையில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.. ஆனாலும் , ஆஸ்கார் விழாவில் பிங்கட் ஸ்மித் குறித்து ராக் கிண்டல் செய்வது இது முதல் முறை கிடையாது என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்… “கிங் ரிச்சர்ட்“ #KingRichard திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு இந்த ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.. தனது மனைவியை கிண்டல் செய்ததால் மேடையில் ஏறி நடிகர் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது..
The uncensored exchange between Will Smith and Chris Rock#WillSmith #ChrisRock pic.twitter.com/j4BpMIk2ux
— NOW LIVE (@now_livee) March 28, 2022