கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மிகவும் அமைதியாக எதையும் கையாள்பவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் 2008ம் ஆண்டு மெல்பான் மைதானத்தில் வைத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. தோனியின் தலைமையில் 15 ஆவதாக ஆடிய இந்த ஒருநாள் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 159 ரன்களில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 102 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. தோனியும் ரோஹித் சர்மாவும் களத்தில் விளையாடத் தொடங்கினர். அதன் பிறகு இந்தியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
அச்சமயம் தோனி தனக்கு புதிய கிளவுஸ் வேண்டும் என கேட்டார் அந்த நேரத்தில் தோனி அவ்வாறு செய்ததற்கு காரணம் தனது அணியில் இருக்கும் வீரர்களுக்கு சில அறிவுரைகளை கூறுவதற்கு தான். அவர் நினைத்தபடி வெற்றிக்குப் பிறகு வீரர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்ற அறிவுரையை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அதன் பிறகு ரோஹித் சர்மாவிடம் வெற்றிக்குப் பிறகு இளம் வீரர்கள் எப்படி கைகுலுக்க வேண்டும் என்ற யோசனையை கூறி வீரர்கள் யாரும் வெற்றி களிப்பை முகத்தில் காட்டாமல் அமைதியான பார்வையோடு ஆஸ்திரேலியா அணியை அணுகுமாறு கூறியுள்ளார்.
தோனி இவ்வாறு செய்ததற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது அந்த காலத்தில் ஆஸ்திரேலியா அணி எதிர் அணியிடம் தோற்றால் அது எதிர் அணியின் அதிர்ஷ்டம் என்று நினைத்தனர். அதோடு பல போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி பெற்றால் அது அவர்களது அணி செய்த தவறு என்று கருதினர். இதனால் மனதளவில் அவர்கள் சோர்வடையாமல் இருந்தனர். இதனை உடைத்தெறிய நினைத்தே ஆஸ்திரேலியாவுடன் ஆடிய போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அதனை கொண்டாடாமல் இந்த வெற்றி எங்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை என்ற தோரணையை அந்த அணியின் முன்பு வெளிப்படுத்த தோனி இந்த யுக்தியை கையாண்டுள்ளார்.